SK22 ஸ்கிரிப்ட் ரெடி! போலீஸ் கெட்டப்பாம்…

by vignesh

எஸ்கே 22 படத்திற்காக இயக்குநர் ஏஆர் முருகதாசுடன் இணையவுள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க கமிட்டாகியுள்ளார். மிருணாள் தாக்கூர் ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகஷ்ன் என்டர்டெயினராக உருவாகவுள்ள இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக காக்கி சட்டை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். அந்தப் படம் அவரது கேரியரில் பெஸ்ட்டாக அமைந்தது. இந்நிலையில், முன்னதாக விஜய் உள்ளிட்டவர்களை வைத்து சிறப்பான வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கூட்டணி அமைத்துள்ளது கோலிவுட்டில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment