அஜித் நடித்த வாலி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா. ஹீரோவாக வேண்டும் என்ற கனவில் கோடம்பாக்கத்தை வலம் வந்த எஸ்ஜே சூர்யாவுக்கு நடிக்க யாருமே வாய்ப்புக் கொடுக்கவில்லை. இதனால் தான் படம் இயக்குவதில் ஆர்வம் காட்டிய அவர், பின்னர் ஹீரோவாகவும் தன்னை நிரூபித்தார். ஆனால், தற்போது வெரைட்டியான நடிகராக மாஸ் காட்டி வருகிறார்.
வாலி, குஷி, நியூ, அன்பே ஆரூயிரே, இசை ஆகிய படங்களை இயக்கியுள்ள எஸ்ஜே சூர்யா, இப்போது கோலிவுட், டோலிவுட்டில் பிஸியான நடிகராகிவிட்டார். சைக்கோதனமான வில்லன் கேரக்டர் என்றால் அதில் எஸ்ஜே சூர்யா தான் நடிக்க வேண்டும் என இயக்குநர்கள் அவரை தேடிச் செல்கின்றனர். இசை, இறைவி, ஸ்பைடர், மாநாடு போன்ற படங்களில் வெரைட்டியாக நடித்து மிரட்டியிருந்தார் எஸ்ஜே சூர்யா. அதனால் தொடர்ந்து ஹீரோ, வில்லன், காமெடியன் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கோலிவுட், டோலிவுட் என இரண்டு பக்கமும் எஸ்ஜே சூர்யாவின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. இது போதாது என அவரை ஹாலிவுட் வரை இழுத்துவிட்டு வேடிக்கைப் பார்க்கின்றனர் நம் ரசிகர்கள். அதாவது கடந்த வாரம் ஹாலிவுட்டில் வெளியான ஓபன்ஹெய்மர் படத்துக்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஹிரோஷிமா-நாகசாகி மீது அணுகுண்டு வீசக் காரணமாக இருந்த ராபர்ட் ஓபன்ஹெய்மரின் பயோபிக் படமாக இது உருவாகியுள்ளது. இதில் ராபர்ட் ஓபன்ஹெய்மர் கேரக்டரில் ஹாலிவுட் நடிகர் சில்லியன் மர்பி நடித்திருந்தார். ஓபன்ஹெய்மர் கேரக்டரும் சில்லியன் மர்பியின் நடிப்பும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், சில்லியன் மர்பியின் போட்டோ அருகே எஸ்ஜே சூர்யாவின் போடோவை வைத்துள்ளனர் நெட்டிசன்கள்.
இருவருமே அச்சு அசலாக ஒரே மாதிரி இருப்பதை பார்த்த ரசிகர்கள், எஸ்ஜே சூர்யா தான் இந்தியாவின் சில்லியன் மர்பி என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இருவரது லுக்கும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக இருப்பது ரசிகர்களுக்கே சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. ஓபன்ஹெய்மர் இரண்ஆம் பாகத்தை கிறிஸ்டோபர் நோலன் இயக்கினால், அவர் எஸ்ஜே சூர்யாவை ஹீரோவாக புக் செய்துவிடுவார் எனக் கூறி வருகின்றனர்.