டீ, காபி குடிக்காதீங்க- சிவக்குமார் அட்வைஸ்…

by vignesh

60, 70களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிவகுமார் ஒரு கட்டத்துக்கு மேல் நடிப்பை விட்டு விட்டு கம்ப ராமாயணம் உள்ளிட்ட புராண நூல்கள் குறித்து பேச ஆரம்பித்தார். பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளுக்கு சென்று சொற்பொழிவு ஆற்றி உள்ளார். சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா மற்றும் இளைய மகனான கார்த்தி இருவருமே சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சிவக்குமார் 82 வயசு வரை இன்னும் இருக்கிறேன் அதற்கு காரணம் யோகா தான். யோகா செய்யுங்க, நல்ல பழக்கத்துடன் இருந்தால் நீண்ட ஆயுளுடன் இந்த உலகத்துல வாழலாம் மேலும் 67 வருஷமா டீ, காபி குடிப்பதை நிறுத்திட்டேன். சிகரெட், தண்ணி பழக்கம் கிடையாது. பிறர் மாது தொடர்பு கிடையாது. இரண்டு பையன் ஒரு பொண்ணு தான் பெத்தான். ஒழுக்கமாக வாழ்ந்தால் நல்லா வாழலாம். சின்ன பசங்களா இந்த டீ, காபி எல்லாம் குடிக்காதீங்க பெரியவங்க கேட்க மாட்டாங்க, தினமும் யோகா பண்ணுங்க அது உங்க உடம்பை ஆரோக்கியமா வச்சுருக்க உதவும் என பேசியுள்ளார்.

You may also like

Leave a Comment