சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் சிவக்குமார்!

by vignesh

நடிகர் சிவக்குமார் ஹீரோவாகவும் குணச்சித்திர கேரக்டர்களிலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர். தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகி, பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வருகிறார். தன்னுடைய மகன்களின் அறக்கட்டளை நிகழ்ச்சிகளிலும் இசை வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளிலும் இவரை அடுத்தடுத்து பார்க்க முடிகிறது. இந்நிலையில் பழ கருப்பையாவின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சிவக்குமார், தனக்கு சால்வை போர்த்த வந்த மூத்த ரசிகரிடமிருந்து அதை பிடுங்கி எறிந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடிகர் சிவக்குமார் தற்போது மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த நபரை தனக்கு 50 ஆண்டுகாலங்களாக தெரியும் என்றும் அவர் தன்னுடைய தம்பி என்றும் கூறியுள்ளார். தனக்கு சால்வை அணிவிக்க வந்தவருடன் இணைந்து அவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் தன்னுடைய செயலுக்கு அவர் வருத்தமும் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment