‘ஜவான்’ பட ட்ரெய்லர் எப்போது???

by vignesh

ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ படத்தின் ட்ரெய்லர் உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்துக்கான புக்கிங் ஏற்கெனவே அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் நடந்து வருகிறது. மும்பையில் ஒரு சில இடங்களில் இப்படத்துக்கான புக்கிங் திறக்கப்பட்ட 15 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ஆகஸ்ட் 31-ம் தேதி இரவு 9 மணிக்கு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துபாயில் நடிகர் ஷாருக்கான் ரசிகர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment