சின்னத்திரை நடிகை கணவர் மாரடைப்பால் மரணம்… சீரியல் உலகம் அதிர்ச்சி…

by vignesh

தனியார் சேனலில் ஒளிபரப்பாகி, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘நாதஸ்வரம்’ சீரியலில் நடித்ததன் மூலமாக நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். இவருக்கும் அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த ஆண்டு இரு வீட்டார் ஏற்பாட்டில் திருமணம் நடந்தது. இந்நிலையில், இன்று திடீரென மாரடைப்பால் அரவிந்த் சேகர் மரணமடைந்துள்ளார்.

ஜிம், உணவு என ஃபிட்னஸில் ஆர்வம் கொண்ட அரவிந்த் சேகர் ’மிஸ்டர் தமிழ்நாடு 2022’ பட்டம் வென்றிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது உடல் நலத்தில் எப்போதும் அக்கறையுடன் இருக்கும் அரவிந்த் சேகர், மாரடைப்பால் மரணமடைந்தது நடிகர், நடிகைகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

You may also like

Leave a Comment