‘சீதா ராமம்’ பட நடிகை கேட்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

by vignesh

முன்னணி நடிகை மிருணாள் தாக்கூர், ‘சீதா ராமம்’ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.

இந்தியில் அவர் ஓரளவு பிசியாக இருந்தாலும் கூட, தென்னிந்திய மொழிகளில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தெலுங்கில் நானியின் 30வது படத்தில் அவரது ஜோடியாக நடிக்கிறார், இந்நிலையில், தென்னிந்திய படங்களில் நடிக்க தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்திவிட்டார்.

ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான சம்பளம் பெற்று வந்த மிருணாள் தாக்கூர், தற்போது தனது சம்பளத்தை 3 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் ஒரு தமிழ்ப் படத்துக்கும், தெலுங்கில் நானி மற்றும் விஜய் தேவரகொண்டாவுடன் நடிப்பதற்கும் 3 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

 

You may also like

Leave a Comment