சந்தானம் பேனருக்கு பீர் அபிஷேகம்!!!

by vignesh

கிக் படம் நேற்று வெளியான நிலையில், புதுச்சேரியில் சந்தானம் ரசிகர்கள் அவரது பேனருக்கு பீரால் அபிஷேகம் செய்தனர்.

புதுச்சேரியில் உள்ள ராஜா திரையரங்கில் கிக் படம் வெளியானதை ஒட்டி சந்தனம் படத்தின் கட்டவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்து பூ தூவி படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பல்வேறு தொழிலாளர்களுக்கு சந்தானம் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பில் இலவசமாக ஒரு ஷோ ஒரு காட்சி காட்டப்பட்டது.

புதுவையில் சந்தானத்தின் பேனருக்கு பீரால் அபிஷேகம் செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, என்னத்தான் புதுச்சேரி என்றாலும் ஒரு நியாயம் வேணாமா பாஸ்? என இணைவாசிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment