வெகேஷனில் கூட சமந்தாவின் வேற லெவல் ஒர்கவுட்!!!

by vignesh

நடிகை சமந்தா, தற்போது வெகேஷனுக்காக பாலி நாட்டுக்கு சென்றுள்ள நிலையில்… அங்கு தோழிகளுடன் ஒர்க்கவுட் செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தென்னிந்திய திரை உலகில், மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவர் முன்னணி நடிகையாக இருக்கும் போதே, பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில்,  கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர்…  இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பரஸ்பரமாக இருவரும் பிரியப்போவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். நாக சைதன்யாவை, விவாகரத்து செய்த பின்னர், தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் சமந்தா, விவாகரத்து குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளத்தில் வட்டமிட்ட நிலையில் அதற்கும் தக்க பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் கடந்தாண்டு மாயோ சிட்டிஸ் எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, சில மாதங்கள் படப்பிடிப்பில் இருந்து ஒதுங்கியே இருந்தார். ‘சாகுந்தலம்’ படத்தின் டப்பிங் பணியில் கூட, கையில் ட்ரிப்ஸ் ஏறியபடி படப்பிடிப்பு பணிகளை இவர் மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி, பல ரசிகர்கள் மனதை கலங்க செய்தது. எழுந்து கூட நிற்க முடியாத நிலையில், இருந்த சமந்தா, இந்தியாவில் பல மாதங்கள் தொடர் சிகிச்சை பெற்றும் உடல் நலனில் முன்னேற்றம் இல்லாததால், அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார்.

கடந்த வாரம் முழுவதும், தமிழகத்தில் உள்ள ஆன்மீக கோவில்களுக்கு சென்ற சமந்தா, தற்போது இந்தோனேசியாவில் உள்ள பாலி நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இவர் வெளியிட, அவை ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டில் கூட சமந்தா தன்னுடைய தோழிகளுடன் ஒர்க்கவுட் செய்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ஒரு பெண் ஒருவரை… தன்னுடைய கை மற்றும் கால்களால் சமந்தா சாமர்த்தியமாக பேலன்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Bhuvanesh S (@bujji5749)

You may also like

Leave a Comment