‘மையோசைடிஸ் இந்தியா’ விளம்பரத் தூதராக சமந்தா நியமனம்

by vignesh

நடிகை சமந்தா ‘மையோசைடிஸ் இந்தியா’ தொண்டு நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மையோசைடிஸ் இந்தியா தொண்டு நிறுவனம் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மாற்றத்தின் புதிய முகத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மையோசைடிஸ் இந்தியாவின் புதிய பிராண்ட் அம்பாசிடராக சமந்தாவை அறிவிப்பதில் மகிழ்ச்சி. மையோசைடிஸ் நோயுடன் போராடிக் கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், நம்பிக்கையை விதைக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இணைந்து முன்னேறுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You may also like

Leave a Comment