தங்கை நிச்சயதார்த்தத்தில் சாய் பல்லவி ஆட்டம்…

by vignesh

மலையாள திரைப்படமான பிரேமம் மூலம் அறிமுகமான சாய் பல்லவி, ஒரே படத்தில் உச்சிக்கு சென்றார். அதன்பின் அவர் மலையாளம் மட்டுமல்லாமல், தெலுங்கு, தமிழ் படங்களிலும் நடிக்க தொடங்கினார். அதிலும் தெலுங்கு சினிமாவில் ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை விடவும் சாய் பல்லவி அதிகளவில் ரசிகர்களை கொண்டவர்.  இந் நிலையில் சாய் பல்லவியின் தங்கையான பூஜா கண்ணனும் சில படங்களில் தலை காட்டினார் ஆனால் எந்த படமும் பேசம் அளவிற்கு இல்லை சமீபத்தில் சாய் பல்லவியின் தங்கை தனது காதலனான வினீத் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.

விரைவில் அவருடன் திருமணம் நடக்கவுள்ளதாக தடாலடி அறிவிப்பையும் வெளியிட்டார். சாய் பல்லவி சினிமாவில் பிஸியாக இருப்பதால், அவர் தற்போது திருமணம் செய்ய விரும்பாததால், தங்கைக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவெடுத்ததாக தகவல் வெளி வந்தது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் பூஜா கண்ணன் – வினீத் ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதில் இரு குடும்பங்களின் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நிச்சயதார்த்த நிகழ்ச்சி முடிவடைந்த பின் குடும்பத்தினர் அனைவருடனும் இணைந்து சாய் பல்லவி நடனமாடி மகிழ்ந்தார். அந்த வீடியோக்கள் ட்ரெண்டான நிலையில், ரசிகர்கள் பலரும் சாய் பல்லவி க்யூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வந்தனர்.

You may also like

Leave a Comment