சந்திரமுகி 2வை தவறவிட்ட சாய் பல்லவி !!

by vignesh

நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் உருவான பிரேமம் படத்தில் மலர் என்ற கேரக்டரில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. சிவகார்த்திகேயனுடன் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வரும் விநாயகர் சதுர்த்தியையொட்டி ரிலீசாகவுள்ள சந்திரமுகி 2 படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை சாய் பல்லவி முன்னதாக தவறவிட்டது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது கங்கணா ரனாவத் நடித்துள்ள சந்திரமுகி ரோலில்தான் சாய் பல்லவி நடிக்கவிருந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த கேரக்டருக்காக இயக்குநர் பி வாசு சாய் பல்லவியை அணுகியபோது, கதையை கேட்டு உடனடியாக ஓகே சொல்லியுள்ளார் சாய் பல்லவி.ஆனாலும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பி வாசுவிடம் இவர் கேட்டுள்ளாராம். இதனால் கடுப்பான பி வாசு, கதையில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்ய முடியாது என்று கூறிவிட்டாராம்.

இதனால்தான் இந்தப் படத்தில் சாய் பல்லவி நடிக்க முடியாமல் போயுள்ளது . முன்னணி நடிகையாக அனைவரையும் கவர்ந்துவரும் சாய் பல்லவி, ஜோதிகா கேரியரில் சிறப்பாக அமைந்த சந்திரமுகி போன்ற கேரக்டரை சில காரணங்களுக்காக தவறவிட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment