அப்பாவை வைத்து முதல் படம் இயக்க மாட்டேன் என கூறிய இளம் இயக்குநர்

by vignesh

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளது குறித்து தற்போது லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.சஞ்சய் சொல்லிய ஸ்கிரிப்ட் பிடித்ததால்தான் அவரை வைத்து படமியக்கும் முடிவை எடுத்ததாக லைகா நிறுவனர் சுபாஷ்கரன் இந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.இதேபோல தன்னுடைய ஸ்கிரிப்டை சுதந்திரமாக உருவாக்க லைகா முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக சஞ்சய்யும் உற்சாகம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே விஜய்யின் மகன் ஜேசன் விஜய், தற்போது தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார். முன்னதாக குறும்படம் இயக்கி, தன்னை நிரூபித்த அவர், தற்போது லைகா நிறுவன தயாரிப்பில் புதிய படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார்.  இந்நிலையில், ஜேசன் சஞ்சய் குறித்து, அவரது தாத்தாவும், விஜய்யின் அப்பாவுமான இயக்குநர் எஸ்ஏசி கொடுத்த பேட்டியொன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவரது பேரன் இயக்குநராகவுள்ளதாக கூறிய நிலையில், உனக்கென்னடா, நீ டைரக்ட் செய்ய நினைத்தால் பெரிய நடிகர் உன் வீட்டிலேயே உள்ளார் என்று தான் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவரை வைத்து எடுத்தால் படம் ஓடிவிடும் என்று தான் கூறிய நிலையில், அதற்கு பதிலளித்த சஞ்சய், இல்லை தாத்தா, விஜய் சேதுபதிதான் தன்னுடைய முதல் ஹீரோ என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளார். தான் இயக்குநராக தன்னை நிரூபித்த பின்பே, அப்பாவை வைத்து படமியக்கும் சஞ்சய்யின் தன்னம்பிக்கையையும் எஸ்ஏசி சுட்டிக் காட்டியுள்ளார். அந்த பேட்டியில் இதுதான் தன்னுடைய ரத்தம் என்றும் சஞ்சய் குறித்தும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment