தேசிய விருதை அள்ளிய ஆர்ஆர்ஆர்.. இருந்தாலும் சற்று ஏமாற்றம்தான்

by vignesh

69ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் ஆர்ஆர்ஆர் படம் விருதுகளை அள்ளியிருக்கிறது. இருந்தாலும் படக்குழுவுக்கு சிறு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என பெயர் எடுத்திருக்கும் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ஆர்ஆர்ஆர். சிறந்த படத்துக்கான விருது கிடைக்கவில்லை என்றாலும் பிற பிரிவுகளில் விருதுகளை அள்ளியிருக்கிறது ஆர் ஆர் ஆர். அதன்படி மோஸ்ட் பாப்புலர் கேட்டகிரியில் அந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. மேலும், சிறந்த நடன அமைப்பாளருக்கான விருது பிரேம் ரக்‌ஷிக்கும் (நாட்டு நாட்டு பாடல் நடன அமைப்பாளர்), சிறந்த பின்னணி பாடகருக்கான விருது கால பைராவுக்கும் (கொமுரம் பீமுடோ பாடல்), சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது கீரவாணிக்கும், சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான விருது கிங் சாலமனுக்கு கிடைத்திருக்கிறது.

 

You may also like

Leave a Comment