நடிகை ரோஜாவின் கணவர் கைதா ???

by vignesh

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் 80, 90-களில்  பிரபலமானவர்  நடிகை ரோஜா .  ரோஜா சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஆர்.கே. செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர் தற்போதைய ஆந்திர சுற்றுலாத்துறை மந்திரியாகவும் இருக்கின்றார்.

இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குநர் ஆர்.கே. செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அருண் அன்பரசு ஆகியோர் அளித்திருந்த பேட்டி ஒன்றில், பிரபல பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துகளை அவதூறாக தெரிவித்திருந்தனர்.இதனைத் தொடர்ந்து இவர்கள் மீது போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். போத்ரா இறந்த பின்னர் போத்ராவின் மகன் குறித்த வழக்கை முன்னெடுத்து வருகின்றார்.

அந்தவகையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று இடம்பெற்றது. இதில் ஆர்.கே. செல்வமணி ஆஜராகாமையினால் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தற்போது ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதுமட்டுமல்லாது குறித்த வழக்கு செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக நடிகையும், ஆந்திர சுற்றுலாத்துறை மந்திரியாகிய ரோஜாவின் கணவருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment