மாமாவுடன் ரொமான்ஸ் பண்ணும் இந்திரஜா சங்கர்!!!

by vignesh

ரோபோ ஷங்கரின் மகள் இந்துஜாவிற்கு விரைவில் திருமணமாக உள்ள நிலையில், மாமாவை கட்டிப்பிடித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் நடித்திருந்தார்.  அதனை தொடர்ந்து இவர் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்திலும் அதிதி ஷங்கரின் தோழியாக நடித்திருந்தார். தற்போது இவர் சில படங்களில் ஒப்பந்தமாக நடித்து வருகிறார்.

இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா அண்மையில் குடும்பத்தோடு குல தெய்வ கோவிலில் முறை மாமனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் யார் இவர் என்று கேட்க, என் மாமா விரைவில் திருமண தேதி அறிவிப்பு வரும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, முறை மாமானின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று கட்டிப்பிடித்து பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். மேலும், என் கடினமான மற்றும் மகிழ்ச்சியான காலங்கள் அனைத்திலும் நீ இருந்தாய். வாழ்நாள் முழுவதும் நான் உன்னுடன் இருக்க விரும்புகிறேன்.எல்லா குட்டி குட்டி சண்டைகளுக்கும் மன்னிக்கவும். நான் உங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். ஐ லவ் யூ மாமா என பதிவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment