ஆபாசம் ஆடையில் இல்லை… பார்வையில் தான் ரேகா நாயர் அதிரடி!

by vignesh

சின்னத்திரை நடிகையான ரேகா நாயர் வம்சம், பகல் நிலவு, ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் பால கணபதி போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ரேகா நாயர் பெண்களின் ஆடை குறித்து பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஆதி காலத்தில் ஆதாம் ஏவாள் என்ன உடை அணிந்து இருந்தார்கள். இலைகளால் உடலை மறைத்தார்கள். அதன் பிறகு தான் புலித் தோல், மாட்டுத் தோலை உடையாக அணிந்து கொண்டோம்.

ஒரு பெண் ஆடையே இல்லாமல் கிடந்தால், தனது வேட்டியை கழட்டி அவளின் மானத்தை காப்பாற்றுபவன் நல்ல மனிதன். அதே போல முழுசா உடலை மூடிக்கொண்டு ஒரு பெண் சென்றாலும், அவளை தொட்டு பார்த்து துன்புறுத்தும் மோசமான ஆணும் இருக்கிறான்.
இதனால், பல பிரச்சனைகள் ஆபாசமான ஆடையால் தான் நடக்கிறது என்று சொல்லிவிட முடியாது.

முதலில் ஆபாசமான உடை என்று ஒன்று இல்லவே இல்லை. தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றுங்கள். எனவே உடையில் ஆபாசம் இல்லை உங்க பார்வையில் தான் ஆபாசம் இருக்கிறது அந்த பார்வையை மாற்றுங்கள் என்று நடிகை ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment