நெல்சனால் வந்த வாழ்வு ரெடின் கிங்ஸ்லி சம்பளம் இவ்வளவா ??

by vignesh

நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ்லி.இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினி – நெல்சன் கூட்டணியில் வெளியான ஜெயிலர் படத்திலும் காமெடியில் கலக்கியுள்ளார் ரெடின்.

இந்நிலையில் இந்தப் படத்திற்காக ரெடின் கிங்ஸ்லி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தில் நடித்த ரெடின் கிங்ஸ்லிக்கு 25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களில் நடித்த போது ரெடின் கிங்ஸ்லி வாங்கிய சம்பளத்தை விடவும், இது பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்சனுக்குப் பிறகு அவரது டீமில் அதிகம் சம்பாதிப்பது ரெடின் கிங்ஸ்லி தான் என சொல்லப்படுகிறது. வித்தியாசமான பாடி லேங்குவேஜ், டயலாக் டெலிவரி மூலம் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்து வரும் ரெடின் கிங்ஸ்லி, இனிவரும் நாட்களில் கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

You may also like

Leave a Comment