தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது!!

by vignesh

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருபவர் ரவீந்தர் சந்திரசேகர்.இவரும் சீரியல் நடிகை மஹாலட்சுமியும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர்.இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் 16 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நட்புன்னா என்னான்னு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்து பிரபலமானவர் லிப்ரா ரவீந்தர். தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். திடக் கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் எனக் கூறி முதலீடு செய்தால், நல்ல லாபம் தருவதாகக் கூறி போலி ஆவணங்கள் தயாரித்து 16 கோடி ரூபாய் பண மோசடி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ரவீந்தர் 15 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக அமெரிக்காவில் இருந்து விஜய் என்பவர் புகார் செய்திருந்தார்.  தற்போது ரூ.16 கோடி மோசடி செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் 16 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு குறித்த தகவல்கள் முழுமையாக தெரியவில்லை. ரவீந்தர் சந்திரசேகர் தரப்பில் இருந்து விரைவில் இதுபற்றி விளக்கம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

You may also like

Leave a Comment