ஜெயம் ரவியின் ‘இறைவன்’ ட்ரெய்லர் செப்.3-ல் ரிலீஸ்

by vignesh

ஜெயம் ரவியின் ‘இறைவன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் ‘இறைவன்’. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படத்தின் முதல் பார்வை ஜனவரி 23-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், வரும் செப்டம்பர் 3-ம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரெய்லரில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்த ட்ரெய்லர் அறிவிப்புக்காக வெளியிடபட்டுள்ள வீடியோவில் யுவன் சங்கர் ராஜவின் பின்னணி இசை ஈர்க்கிறது.

You may also like

Leave a Comment