விஜய்யின் அரசியல் வருகை…. வாழ்த்துச் சொன்ன பிரபலம்…

by vignesh

கட்சி தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை யாருக்கும் ஆதரவில்லை. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்று அறிவித்து இருந்தார்.

ஏற்கனவே விஜய்யின் அரசியல் வருகை குறித்து பலரும் வாழ்த்துச் சொல்லி வருகிறார்கள், குறிப்பாக சீமான், டி. ஆர். ராஜேந்த்தர் என பலரும் வாழ்த்துச் சொன்ன நிலையில் தற்போது ரஜினியும் தனது பங்கிற்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

ஏற்கனவே கழுகு காகம் என ரஜினி எதோ பேச அதை விஜய் ரசிகர்கள் தவறாக புரிந்து கொண்டு சோசியல் மீடியாவில் கழுவி ஊத்த சமீபத்தில் லால் சலாம் பட விழாவில் ரஜினி நேரடியாக விஜய் குறித்து மனம் திறந்து பேசினார், அதில் நான் விஜயை அப்படி குறிப்பிடவில்லை என சொல்லி அந்த சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்க தற்போது ரஜினியின் வாழ்த்து பேசு பொருள் ஆகி இருக்கிறது.

 

You may also like

Leave a Comment