தனது தந்தையுடன் சூப்பர் ஸ்டார் 😍… அரிய புகைப்படம்…

by vignesh

சினிமாவுக்கு என்று இருந்த இலக்கணத்தை உடைத்து இன்றும் பலர் தங்களை ஹீரோவாக நினைத்துக் கொண்டு திரையுலகத்திற்குள் நுழையவும், அப்படி நுழைந்தவர்களும் தங்களை சூப்பர் ஸ்டார்கள் ஆன நினைத்துக் கொள்வதற்கும் பாதை போட்டுத் தந்தவர் ரஜினிகாந்த்.

இந்த 43 ஆண்டுகள் திரைப்பட வாழ்க்கையில் கே.பாலசந்தர் தொடங்கி இன்றைய இளம் இயக்குநர்களான பா.ரஞ்சித் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் வரை அனைத்து இயக்குநர்களிடமும் பணியாற்றியும், பணிபுரிந்து கொண்டும் இருக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே.

அரசியல் களத்தில் ரஜினி எதிர்பார்த்தது நிகழாமல் இருக்கலாம். ஆனால், திரையில் ஆபூர்வ ராகங்களில் கேட்டைத் திறந்தபடி ரசிகர்களின் மனதுக்குள் நுழைந்த ரஜினிகாந்த், இன்று வரை,பலரது மனதினுள் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் சூப்பர் ஸ்டார் அவர்தான். ரஜினிகாந்த் என்பது வெறும் ஒரு பெயர் அல்ல… அது எக்கால ரசிகர்களும் சிலிர்த்து மகிழக் கூடிய ‘வைப்’. ஆம், அது ஒரு மந்திரச்சொல்!

இப்படி சினிமா உலகில் நீண்ட காலமாக கொடி கட்டிப் பறக்கும் ரஜினிகாந்த் தனது தந்தையுடன் இருக்கும் படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் படத்தை பார்த்த ரசிகர்கள் ரஜினியின் தலைமுடி ஸ்டைலையும், மீசை இல்லாத முகத்தையும் பார்த்து தில்லு முல்லு பட கால கட்டத்தில் இந்த புகைப்படம் எடுத்திருக்கலாம் என சேர் செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment