ஜெயிலர்’ படம் பார்க்க ஜப்பானிலிருந்து சென்னைக்கு வந்த ரஜினி ரசிகர்..!

by vignesh

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகம் பூராகவும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு என்பது நம் அனைவருக்கும் தெரியும். இன, மத, மொழி வேறுபாடின்றி பலரின் இவரின் படங்களை விரும்பிப் பார்ப்பார்.

இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் பல ரசிகர்கள் வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்து ரஜினியின் படத்தைப் பார்ப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் ஜப்பானின் ஒஸாகா நகரைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றத் தலைவரான யசுதா ஹிடெடோஷி, தனது மனைவியுடன் இணைந்து ஜெயிலர் படம் பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளார்.

“ஜெயிலர் படம் பார்ப்பதற்காக நான் ஜப்பானில் இருந்து சென்னை வந்தேன், தலைவா ரொம்ப ரொம்ப நன்றி, இங்க நான் தான் கிங்கு… இங்க நான் வைப்பது தான் ரூல்ஸூ, ஹூக்கும்” என ரஜினி போன்று மாஸாக பேசிக் காட்டியுள்ளார்.

“ஜெயிலர்’ படம் ரொம்ப எதிர்பார்ப்பு நிறைந்த படமாக இருப்பதாகவும், ரொம்ப மிக்க மகிழ்ச்சி” எனவும் தெரிவித்துள்ளார் ஜப்பான் ரஜினி ரசிகர்.

You may also like

Leave a Comment