கட்சி தொடங்குகிறாரா ரஜினியின் மூத்த மகள்???

by vignesh

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி உள்ளது லால் சலாம் படம் , ரசிகர்களிடைய கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது, இந்நிலையில் லால் சலாம் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை திருச்சி ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் அறிமுகப்படுத்தி உள்ளது. கொடியை அறிமுகப்படுத்தி பேசிய நற்பணி மற்ற உறுப்பினர் ஒருவர், இன்று வெளியாகி உள்ள லால் சலாம் படம், மத நல்லிணக்கத்தை வலியுறுத்துகின்ற. இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒரு சிறந்த படம். இந்த படம் விருதை வாங்கும் படமாக மட்டும் இல்லாமல், மக்களின் மனதை வெகுவாக கவரக்கூடிய ஒரு ஜனரஞ்சகமான அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

இந்த படத்தை இயக்கிய தலைவரின் மகள் ஐஸ்வர்யா அவர்கள் இன்னும் பல சிறப்பான பல படங்களை இயக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும்,ஐஸ்வர்யா லால் சலாம் படத்தில் புரட்சிகரமான கருத்தை வைத்து இருக்கிறார் என்பதற்காக கொடியில் சிவப்பும், மிதமான முறையில் படத்தின் கதையை கொண்டு சொன்றதால், மஞ்சலும், அவர் என்றைக்கும் வெற்றி அடைய வேண்டும் என்பதால் அவரின் உருவத்தை பச்சையில் பொறுத்து இருப்பதாகவும். இந்த படம் வெற்றி அடைய எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர். முதலில் விஷயம் அறியாமல் கொடியை மட்டும் பார்த்த ரசிகர்கள் விஜய், விஷாலுக்கு அடித்த படியாக ரஜினியின் மகளும் கட்சி ஆரம்பித்து அப்பா விட்ட இடத்தை மகள் பிடிக்கப் போகிறார் என தவறாக எண்ணி கமெண்ட்ஸ் போட்டுட்டாங்களாம்.

 

You may also like

Leave a Comment