விஜய் செய்யாததை ராகவா லாரன்ஸ் செய்கிறாரா??? விஜயகாந்த் குடும்பம் நெகிழ்ச்சி…

by vignesh

தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். சினிமா, அரசியல், பொதுவாழ்வு என தான் பயணித்த அனைத்திலும் விஜயகாந்த் செய்த உதவிகள் ஏராளம். விஜய், சூர்யா போன்ற இளம் ஹீரோக்களுக்காக அவர்களுடன் கேமியோ ரோலிலும் நடித்துக் கொடுத்திருந்தார். இந்நிலையில், கடந்த மாதம் இறுதியில் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தாத ராகவா லாரன்ஸ், தனது அம்மாவுடன் விஜயகாந்த் இல்லம் சென்று இறுதி மரியாதை செய்தார்.

“அப்போது விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடித்து கொண்டிருப்பது பற்றி என்னிடம் சொன்னார்கள். திரையுலகை சேர்ந்த நீங்கள் எல்லோரும் தான் அவரைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்கள். அவர்கள் சொன்ன அந்த வார்த்தை என்னை மிகவும் பாதித்தது. விஜயகாந்த் சார் திரையுலகிற்கு செய்யாத உதவிகளே இல்லை. மற்ற ஹீரோக்கள் படத்தில் கேமியோ கெஸ்ட் ரோல் எல்லாம் செய்வார். அவர் பல ஹீரோக்களை வளர்த்து விட்டிருக்கிறார்.”

“திரையுலகினருக்கு ஒரு வேண்டுகோள், யாராவது நல்ல டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருந்தால் சொல்லுங்கள். சண்முகப் பாண்டியனோடு இணைந்து நடிக்க நான் தயாராக இருக்கிறேன். இது அவரது குடும்பத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமை, அப்போது அவரது ஆத்மா சந்தோசப்படும். இது என் மனதிற்கு தோன்றியது. அவரது மூத்த மகன் பிரபாகரன் அரசியலில் இருக்கிறார் அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய என் வாழ்த்துகள். இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை பட்டேன்” என பேசியிருந்தார்.

You may also like

Leave a Comment