45 ஆண்டுகளை பூர்த்தி செய்த ராதிகா…

by vignesh

நடிகை ராதிகா சரத்குமார், கடந்த 1978ம் ஆண்டில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின்மூலம் தன்னுடைய திரையுலக பயணத்தை துவக்கியவர். எம்ஆர் ராதாவின் மகள் என்ற அடையாளம் இருந்தபோதிலும் அதுமட்டுமே தன்னுடைய வெற்றிக்கு காரணமாக அமையாது என்று தெரிந்து வைத்திருந்தார் ராதிகா. தன்னுடைய முயற்சி மற்றும் உழைப்பால் மாறுபட்ட பல கேரக்டர்களில் நடித்து உயரங்களை தொட்ட ராதிகா தற்போது திரையுலகில் 45 ஆண்டுகளை எட்டியுள்ளார்.

இந்நிலையில் சினிமாவில் தன்னுடைய 45 ஆண்டுகளை ராதிகாவும் கடந்துள்ளார். இதையொட்டி தன்னுடைய குடும்பத்தினருடன் அவர் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

You may also like

Leave a Comment