பிரபல தயாரிப்பாளர் ராஜ்கண்ணு காலமானார். பாரதிராஜா வேதனை

by vignesh

இயக்குநர் பாரதிராஜாவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 77.

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், பூ பூத்த நந்தவனம், கமல்ஹாசனின் மகாநதி உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு.அவரது மறைவு செய்தியை அறிந்த இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் மனவேதனையுடன் போட்டுள்ள பதிவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தனது ட்விட்டர் பக்கத்தில், “16 வயதினிலே திரைப்படத்தின் வாயிலாக என்னை இயக்குனராக அறிமுகம் செய்து, என் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற என் முதலாளி திரு. S.A.ராஜ்கண்ணு அவர்களின் மறைவு,பேரதிர்ச்சியும், வேதனையும், அளிக்கிறது. அவரின் மறைவு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல்.” என பதிவிட்டுள்ளார் பாரதிராஜா.

You may also like

Leave a Comment