மிஸ்கின் செயலால் கடுப்பான தாணு…

by vignesh

ட்ரைன் எனும் தலைப்பில் புதிய படத்தை மிஸ்கின் இயக்கி வருகிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.

வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு பௌசியா பாத்திமா என்பவர் தான் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில், ட்ரைன் படத்தின் படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் பௌசியா பாத்திமாவை ஒளிப்பதிவு செய்யவிடாமல், அவரிடம் இருந்து கேமராவை எடுத்துக்கொண்டு, இயக்குனர் மிஸ்கின் ஒளிப்பதிவு செய்ய துவங்கிவிட்டாராம். ஒளிப்பதிவு செய்ய வந்த பௌசியா பாத்திமாவை ஓரமாக நிற்கவைத்துவிட்டாராம் இயக்குனர் மிஸ்கின்.

இதை படப்பிடிப்பில் கவனித்த தயாரிப்பாளர் தாணு, ஒளிப்பதிவு செய்வதற்காக தான் ரூ. 25 லட்சம் சம்பளம் கொடுத்து பௌசியா பாத்திமா இப்படத்திற்கு கமிட் செய்து இருக்கிறேன். அவங்கள ஒளிப்பதிவு பண்ண விடுங்க என மிஸ்கினிடம் கடுப்பாக கூறிவிட்டாராம் தாணு.

You may also like

Leave a Comment