விலை மதிக்க முடியாத அனுபவங்கள்.. அட்லீ நெகிழ்ச்சி

by vignesh

படங்களை அப்பட்டமாக காப்பியடிக்கிறார் அட்லீ என்ற விமர்சனம் எழுந்தாலும் அவர் இயக்கும் படங்கள் வசூலை அள்ளுவதால் அவருக்கான டிமாண்ட் அதிகரித்தது. அதன்படி தற்போது அவர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிவருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். 2021ஆம் ஆண்டே படத்தின் பணிகள் தொடங்கப்பட்டாலும் சில காரணங்களால் படப்பிடிப்பு முடிவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜவான் ட்ரெய்லர் குறித்து ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “சார்..மாஸ்.. எல்லாவற்றிற்கும் நன்றி” என பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் ட்வீட் செய்துள்ள இயக்குநர் அட்லீ, “ராஜாக்களின் கதைகளை கேட்டு நிஜத்தில் அப்படியான ஒருவருடன் பயணம் செய்வதுவரை, நான் கனவு கண்ட வாழ்க்கையை வாழ்கிறேன் என நினைக்கிறேன்.

இந்தப் படம் என்னுடைய எல்லைக்கு என்னை கொண்டு சென்றது. இந்தப் பயணத்தில் விலைமதிக்க முடியாத அனுபவங்களைப் பெற்றேன். சினிமா மீதான உங்கள் ஆர்வத்தையும், கடின உழைப்பையும் கடந்த 3 வருடங்களாக உன்னிப்பாக கவனித்து வந்த எனக்கு அது மிகப் பெரிய உத்வேகம் அளித்தது. லவ் யூ சார். இந்த சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு மொத்த படக்குழு சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment