உடல் நலக்குறைவால்  இளையராஜாவின் மகள் பவதாரணி மரணம்..

by vignesh

பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரணி இன்றைய தினம் உடல்நலக்குறைவு காரணமாக இலங்கையில் உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக புற்று நோய் பாதிக்கப்பட்ட நிலையில் பவதாரணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனளிக்காத நிலையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக பவதாரணியை இலங்கைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை 5.20 மணியளவில் பவதாரணி உயிரிழந்தார். அவருக்கு வயது 47. அவரது உடல் நாளை மாலை சென்னை கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment