பரிதாபங்கள் கோபி – சுதாகரின் அலப்பறையை காண ரெடியா!!

by vignesh

மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான கோபி சுதாகர் ஏகப்பட்ட பரிதாபங்கள் வீடியோவை வெளியிட்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கான தனி இடத்தை பிடித்து விட்டனர்.

பரிதாபங்கள் என்றே  யூடியூப் சேனலை ஆரம்பித்தனர். தொடர்ந்து அந்த யூடியூப் சேனலில் காமெடி வீடியோக்களை கோபி மற்றும் சுதாகர் கொடுத்து வந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளனர்.

முதல் படம் முடியாத நிலையில் இரண்டாவதாக தொடங்கிய படத்தை தற்போது வெற்றிகரமாக கோபி மற்றும் சுதாகர் முடித்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

விஷ்ணு விஜயன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் சார்லி சாப்ளின் போல மற்றும் சுதாகர் வேடம் அணிந்து நடித்துள்ள காட்சிகளும் தற்போது அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் இடம் பெற்றுள்ளன. மேலும் மாஸ்டர் படத்தை போல கல்லூரியில் மாணவர்கள் கோஷ்டியுடன் நடக்கும் சண்டையும் நட்பும் இந்தப் படத்தின் பிரதானமாக இருக்கும் என்பதை அவர்கள் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ உணர்த்துகிறது.

You may also like

Leave a Comment