ஆஸ்கர் விருதுகள் 2024 லிஸ்ட் ரெடி…

by vignesh

96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் மாதம் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. இதையொட்டி இன்றைய தினம் ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது.

கோல்டன் க்ளோப் விருதுகளை வென்ற திரைப்படங்கள் தற்போது ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலிலும் இடம்பெற்றுள்ளன. கடந்த ஜனவரி 8ம் தேதி நடைபெற்ற 81வது கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் ஓபன்ஹெய்மர், கில்லர்ஸ் ஆப் தி ப்ளவர் மூன், பார்பி, புவர் திங்ஸ் உள்ளிட்ட படங்கள் ஏராளமான விருதுகளை தட்டிச் சென்றன. கிறிஸ்டோபர் நோலன், கிலியன் மர்பி, எம்மா ஸ்டோன், லில்லி கிளாட்ஸ்டோன் உள்ளிட்டோர் விருதுகளை வென்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஆஸ்கர் பரிந்துரை பட்டியலிலும் இவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

You may also like

Leave a Comment