லியோ படத்தின் கதை லீக்கானதா???

by vignesh

மாநகரம், மாஸ்டர், கைதி, விக்ரம் படத்தை தொடர்ந்து இப்போது விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துவிட்டதாக தனது உதவி இயக்குனர்களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் படு வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் தான் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி லீக்கானது என்று ஒரு கதை சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

லியோ படத்தில் விஜய்-த்ரிஷா இருவரும் கணவன் மனைவியாக ஒரு காபி ஷாப் வைத்து தனது மனைவி மற்றும் மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அப்போது மாபியா கும்பலால் அங்கு பிரச்சனை ஏற்பட விஜய் சண்டையிடும் போது இந்த பிரச்சனை எல்லா இடத்திலும் பரவுகிறது, அவரது முன்னாள் எதிரிகளுக்கும் தெரிய வருகிறது.

இதன் காரணமாக ஃபிளாஷ்பேக் காட்சி செல்கிறது. அதனால் ஏற்படும் விளைவு தான் லியோ படத்தின் மொத்த கதை என்கின்றனர்.

இதுதான் நிஜ கதையா என்பது தெரியவில்லை, ஆனால் படக்குழுவினர் எதுவும் லீக்காக கூடாது என்று ஜாக்கிரதையாக அனைத்தும் செய்து வருகிறார்களாம்.

You may also like

Leave a Comment