மீண்டும் ‘நாயகன் ‘ ரிலீஸ் !

by vignesh

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் ‘நாயகன்’.1987-ம்ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

மும்பையைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தில் வேலு நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் கமல் நடித்துள்ளார். இந்தப் படத்துக்காக கமல்ஹாசனுக்குச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், கலை இயக்குநர் தோட்டா தரணிக்கும் தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில் இந்தப் படம் நவ. 3-ம் தேதி டிஜிட்டலில் மீண்டும் வெளியாகிறது.

You may also like

Leave a Comment