நாஞ்சில் விஜயன் ரிசப்ஷன்.. வாழ்த்து கூறிய பிரபலங்கள்!!!

by vignesh

நாஞ்சில் விஜயனின் திருமண வரவேற்பு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயன், சிரிச்சா போச்சு, அது இது எது? உள்ளிட்ட நிகழ்ச்சியில் தனது  நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தார். இவருக்கு பெண் வேடங்கள் பக்காவாக பொருந்தி இருக்கும் என்பதால், பெரும்பாலும் இவர் பெண் வேடத்திலேயே காமெடி நகைச்சுவை நிகழ்ச்சியில் நடித்திருப்பார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. மரியா என்ற பெண்ணை நாஞ்சில் விஜயன் கரம் பிடித்துள்ளார். இந்த ஜோடியின் திருமண புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்திருந்தார். இதையடுத்து வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

You may also like

Leave a Comment