‘சொர்க்கவாசல்’ படத்தில் நைஜீரிய நடிகர்!

by vignesh

நைஜீரியாவைச் சேர்ந்த நடிகர் சாமுவேல் அபியோலா ராபின்சன்  தமிழில் அறிமுகமாகிறார். மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், ‘சூடானி ஃபிரம் நைஜீரியா’. இதில்  சாமுவேல் முக்கிய வேடத்தில் நடித்தார். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து மலையாள ரசிகர்களிடம் அவர் பிரபலமானார்.

தற்போது ஆர்ஜே.பாலாஜி, செல்வராகவன் நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ படத்தில் சாமுவேல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் இயக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் நடிக்கும் தகவலை சமீபத்தில் அளித்த பேட்டியில் சாமுவேல் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment