மின்சாரக் கண்ணா திரைப்பட நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

by vignesh

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான மின்சார கண்ணா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றிருந்தது. விஜய், ரம்பா, ஓரளவிற்கு போன்ற பலர் நடித்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் மோனிகா காஸ்ட்லினோ.

மும்பையைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து சில ஹிந்தி படங்களில் நடித்திருந்தாலும் அவை வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து இவர் 2010ம் ஆண்டு துணை இயக்குநரான சத்ய பிரகாஷ் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புக்கள் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் சென்று சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.2009ம் ஆண்டு சீரியலில் நடிக்க தொடங்கிய மோனிகா தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment