‘மார்க் ஆண்டனி’ படத்தின் இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியீடு…

by vignesh

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘ஐ லவ் யூ டி’ என்ற பாடல் இன்னும் 3 நாட்களில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment