எதிர்நீச்சலால் எகிறும் குணசேகரனின் சம்பளம் ???

by vignesh

யுத்தம் செய், பரியேறும் பெருமாள், மருது, சுல்தான், கூட்டத்தில் ஒருவன், விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் மாரிமுத்து. தற்போது எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரொம்பவே பிரபலமாகிவிட்டார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் வில்லனாக நடித்துள்ள மாரிமுத்து, ரியல் ஆதி குணசேகரனாகவே மிரட்டி வருகிறார்.

இதுவரை பல திரைப்படங்களில் நடித்துள்ள மாரிமுத்துவுக்கு, எதிர்நீச்சல் சீரியல் தான் மிகப்பெரிய சக்சஸ் கொடுத்துள்ளது. வசந்த், எஸ்ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்துள்ள மாரிமுத்து, கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு எதிர்நீச்சல் சீரியல் தான் உச்சத்தில் கொண்டுபோய் விட்டது. முக்கியமாக எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவின் காட்சிகளை எடிட் செய்து ரீல்ஸில் வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள். எதிர்நீச்சல் சீரியல் ஹிட் அடிக்க மாரிமுத்துவின் வில்லத்தனம் தான் காரணம் என ரசிகர்களே கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியலுக்காக மாரிமுத்து வாங்கும் சம்பளம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு மாதத்திற்கு மட்டுமே 75 முதல் 85 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக வாங்குகிறாராம் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியலில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment