தக் லைஃப் ஸ்பாட்டில் மணிரத்னம்….

by vignesh

கமலுடன் இணைந்து கேங்ஸ்டர் கதைக்களத்தில் தக் லைஃப் படத்தை இயக்குகிறார் மணிரத்னம். ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்க,  அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஆக்‌ஷன் கோரியோ கிராபி செய்ய த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஜோஜூ ஜார்ஜ், கெளதம் கார்த்திக், நாசர், அபிராமி ஆகியோர் தக் லைஃப் படத்தில் கமிட்டாகியுள்ளனர்.
ஏற்கனவே முதல் ஷெட்யூலை முடித்த கையோடு  இரண்டாவது ஷெட்யூலை தொடங்கிவிட்டார் மணிரத்னம்.

தற்போது படப்பிடிப்பானது ரஷ்யாவில் நடைபெற இருப்பதால் படக்குழுவினர் பாதி பேர் ரஷ்யா சென்று விட்டனர், ரஷ்யாவின் பனி படர்ந்த மலை பிரேதசத்தில் மணிரத்னம் எடுத்துக்கொண்ட செல்ஃபியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எப்படியும் படத்தை சீக்கிரம் முடித்து தமிழ்புத்தாண்டு அன்று வெளியிட திட்டமிட்டு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

You may also like

Leave a Comment