விபத்தில் சிக்கிய டோவினோ தாமஸ்..

by vignesh

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் படப்பிடிப்பின் விபத்தில் சிக்கியதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகர் என பெயர் எடுத்த டோவினோ தாமஸ், தனுஷ் , சாய் பல்லவி நடித்த மாரி 2 வில்லனாக நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார். மாரி 2 படத்திற்கு பின் இவருக்கு என்று கோலிவுட்டிலும் தனி ரசிகர்கள் உருவாகினார்கள்.

அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களில் நடித்து வரும் டோவினோ தாமஸ் லால் ஜூனியர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நடிகர் திலகம் படத்தில் நடித்து வருகிறார். பெரும்பாவூர் அருகே மாரம்பள்ளியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து, படக்குழுவினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவர்கள் அவரை இரண்டு வாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

You may also like

Leave a Comment