‘லியோ’ படத்தின் சர்ச்சைக்குரிய வசனத்திற்கு நானே பொறுப்பேற்கிறேன்”- லோகேஷ் கனகராஜ்

by vignesh

“கதாபாத்திரத்தின் உணர்ச்சியை வெளிப்படுத்த அந்த வார்த்தையை பயன்படுத்தினோம். இதை பேச வேண்டுமா? என விஜய் கேட்டார். இதற்கு நானே பொறுப்பேற்கிறேன்” என சர்ச்சைக்குரிய வசனம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்துள்ளார்

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லரில் தகாத வார்த்தை இடம்பெற்றிருந்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ், “திரையரங்குகளில் அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டுதான் வெளியாகும். முதலில் இந்த வார்த்தையை பேச வேண்டுமா என விஜய் சந்தேகமுடனே கேட்டார். நான்தான் கதைக்கு தேவையென கூறி அவரை ஒப்புக்கொள்ள வைத்தேன் என கூறியுள்ளார் .

 

You may also like

Leave a Comment