லியோ Review !

by vignesh

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் நேற்று வெளியானது .

இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய மலைக் கிராமத்தில் மனைவி, பிள்ளைகள் என அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் பார்த்திபன் (விஜய்).  ஊருக்குள் நுழைந்து விடும் காட்டு விலங்குகளை பிடிக்கும் அனிமல் ரெஸ்க்யூவராகவும் இருக்கிறார். அப்படி ஒருமுறை  கழுதைப்புலியை திறமையாக பிடிப்பதால் ஊர் மக்களிடம் நன்மதிப்பை பெறுகிறார். இன்னொரு பக்கம் செயற்கையாக விபத்துகளை ஏற்படுத்தி பணம் பறிக்கும் மிஷ்கின் கும்பலால் தன் மகளின் உயிருக்கு ஆபத்து வரும் நேரத்தில் தன்னையே அறியாமல் ஒட்டுமொத்த கும்பலையும் கொன்றுவிடுகிறார்.

சிறைக்குச் சென்று வெளியே வரும் அவரது புகைப்படத்தைப் பேப்பரில் பார்த்து, பல வருடங்களுக்கு முன்பு இறந்துபோன லியோ தாஸ் தான் பார்த்திபனா என்பதை தெரிந்து கொள்ள வருகின்றனர் போதைப் பொருட்களை கடத்தும் ஆண்டனி தாஸும் (சஞ்சய் தத்) அவரது தம்பி ஹரால்ட் தாஸும் (அர்ஜுன்). இவர்களால் பார்த்திபனுக்கும், அவரது குடும்பத்துக்கும் பல இடையூறுகள் நிகழ்கின்றன. அவற்றில் இருந்து பார்த்திபன் தப்பித்தாரா, இறந்துபோன லியோ யார், – இப்படி பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘லியோ’ திரைக்கதை.

You may also like

Leave a Comment