தணிக்கைக்குச் சென்ற ‘லியோ’ படத்துக்கு 13 இடங்களில் திருத்தம்

by vignesh

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம், ‘லியோ’. சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி, வரவேற்பைப் பெற்றது. அதில் இடம்பெற்ற ஆபாச வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்தப் படம் தணிக்கைக்குச் சென்றது. படத்தைப் பார்த்த தணிக்கை குழு இதில் 13இடங்களில் திருத்தம்  செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டது. ஆபாச வார்த்தை இடம்பெறும் இடத்தில் ‘பீப்’ ஒலி இடம் பெற வேண்டும். படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment