‘லியோ’ பட ஹரால்டு தாஸ் கதாபாத்திர கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு…

by vignesh

நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளையொட்டி, லியோ படத்தில் அவர் நடித்திருக்கும் ஹரால்டு தாஸ் கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை ‘லியோ’படக்குழு வெளியிட்டுள்ளது.

சுமார் 40 விநாடிகள் ஓடும் அந்த கிளிம்ப்ஸ் வீடியோ காட்சியில், ஆந்திர மாநில பதிவெண் கொண்ட காரில் இருந்து இறங்கும் அர்ஜுன், விக்ரம் படத்தின் இறுதிக் காட்சியில் நடிகர் சூர்யா வருவது போல ஹரால்டு தாஸ் கதாப்பாத்திரத்தில் மிரட்டலாக காட்டப்படுகிறார்.

அடியாட்கள் புடைசூழ ஒருவரது கையை வெட்டுவதும், சிகரெட்டை புகைத்தபடி மிரட்டலான லுக்கில் அர்ஜுன் திரும்ப, அந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் ஹேப்பி பா்த்டே ஹரால்டு தாஸ், ஆக்சன் கிங் அர்ஜூன் என்ற வாசகங்கள் வருகிறது. கர்ஜிக்கும் புன்னகையுடன் ‘தெறிக்க’ என்று அர்ஜுன் கூறுவது போன்று அந்த கிளிம்ப்ஸ் வீடியோ முடிவடைகிறது.

You may also like

Leave a Comment