மீண்டும் லியோ படப்பிடிப்பா??? காஷ்மீர் பறந்த படக்குழு…

by vignesh

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். காஷ்மீரில் தொடங்கிய ஷூட்டிங் சென்னை,திருப்பதி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்தது. மாஸ்டரில் ஏற்கனவே விஜய்யும், லோகேஷும் இணைந்து மாஸ் காட்டியிருந்ததால் லியோவிலும் அவ்வாறே நடக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினரும், விஜய் ரசிகர்களும் இருக்கின்றனர்.

இந்நிலையில் லியோ படக்குழு மீண்டும் காஷ்மீர் பறந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது படத்துக்கான பேட்ச் ஒர்க் இன்னமும் பாக்கி இருக்கிறது. அதனை முடிப்பதற்காகத்தான் காஷ்மீர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய காஷ்மீர் சுற்றுப்பயணத்தில் விஜய் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

You may also like

Leave a Comment