மீண்டும் பாஷா பாய்… லால் சலாம் டிரைலர் வெளியீடு…

by vignesh
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிரிக்கெட் விளையாட்டை சார்ந்து உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது ‘லைக்கா புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
 
இப்படத்தில் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் ஒரு கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே  சமீபத்தில் ஆடியோ லாஞ்ச்சில் ரஜினியின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அப்பா சங்கி இல்லை என குறிப்பிட்டு பரபரப்பை பற்ற வைத்தார். அது ஒரு புறம் இருக்க தற்போது லால் சலாம் டிரைலர் வெளியாகி ட்ரேண்டிங்க்கில் நம்பர் 1 ஆகி விட்டது. எது எப்படியோ மீண்டும்  செம கலெக்ஷன அள்ளபோகுதா என பொறுத்து இருந்து பார்ப்போம்.

You may also like

Leave a Comment