விஜய் இப்படி சொல்வாரு எதிர்பார்க்கவில்லை.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

by vignesh

ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான் கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அந்த வகையில் விஜய்யுடன் பைரவா, சர்கார் விக்ரமுடன் சாமி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழில் அவர் கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. குறிப்பாக கீர்த்தி சுரேஷின் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது நடிப்பில் ரகு தாத்தா உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன.

இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிசுகிசு தீயாக பரவியது. அதாவது விஜய்யும், கீர்த்தி சுரேஷும் காதலிக்கிறார்கள் என்றும்; கீர்த்தி சுரேஷை விஜய் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றும் பேசப்பட்டது. ஆனால் அதில் உண்மை துளியும் இல்லை. இருந்தாலும் தொடர்ந்து விஜய் – கீர்த்தி சுரேஷ் குறித்த பேச்சு அடிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

இந்தச் சூழலில் விஜய் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. சர்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மகாநடி படத்தில் கீர்த்தி சுரேஷின் ஃபெர்பார்மன்ஸை புகழ்ந்து தள்ளியிருப்பார் விஜய். அதுகுறித்து ஒரு பேட்டியில் பேசிய கீர்த்தி, “மகாநடி படத்தை பார்த்த பிறகு அப்போதே எனக்கு ஃபோன் செய்து பாராட்டினார் விஜய். அதையும் தாண்டி அவர் மேடையில் அப்படி சொன்னது ரொம்பவே சந்தோஷம். சத்தியமாக நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. அப்படி சொல்ல வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை. இருந்தாலும் சொன்னார்” என்றார்.

You may also like

Leave a Comment