ஷுட்டிங் ஸ்பாட்டிங்கில் தல பொங்கல் கொண்டாடிய அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்…

by vignesh

நடிகர் அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோ ஆவார். அவர் நடித்த ஓ மை கடவுளே, போர் தொழில் ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. அதேபோல் கீர்த்தி பாண்டியனும், அன்பிற்கினியாள், தும்பா என ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

அண்மையில் இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு சிம்பிளாக நடந்தாலும் திரையுலகைச் சேர்ந்த பிரலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிலையில்,கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் இருவரும் இணைந்து தல பொங்கலைக் கொண்டாடியுள்ளனர்.அதுவும் அசோக் செல்வனின் படப்பிடிப்புத் தளத்தில் பொங்கலைக் கொண்டாடியுள்ளனர். இது குறித்த புகைப்படங்களை கீர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment