“காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”- ஓடிடியில் படைத்த சாதனை

by vignesh

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவான ஆக்சன் கமர்ஷியல் திரைப்படமான “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படமும் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.

2023 ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் ZEE5 தளத்தில் வெளியான இப்படம், குடும்ப பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

You may also like

Leave a Comment